பாகுபலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதில் பிரபாஸின் புகழ் தற்போது நாளுக்குநாள் ஏறிக்கொண்டே செல்கிறது டோலிவுட்டில். பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் சுமார் 560 கோடிகளை வசூல் செய்தது, இதனால் படத்தில் 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த நாயகன் பிரபாசிற்கு இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் தெரிந்த நாயகன் மற்றும் வசூல் நாயகன் போன்ற புகழ், பெருமைகளுடன் இன்னொரு மிகப்பெரிய நன்மையும் பிரபாசிற்கு கிடைத்துள்ளது. அதாவது படத்தின் முதல் பாதியில் 3 வருட உழைப்பிற்காக சுமார் 24 கோடிகள் வரை சம்பளமாகப் பெற்றிருந்த பிரபாஸ்,தற்போது பாகுபலியின் 2 வது பாகத்தில் அதைவிட அதிகத் தொகையினை பெற இருக்கிறாராம்.
பிரபாஸின் உழைப்பைப் பார்த்த இயக்குநர் ராஜமௌலி 2 வது படத்தின் லாபத் தொகையில், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பிரபாசிற்கு கொடுக்க ஏற்கனவே தீர்மானித்து விட்டாராம். தற்போது தயாரிப்பாளர்களும் இதனை உறுதி செய்திருக்கின்றனர், 2 வது பாகத்தின் மூலம் போட்ட பணத்தை திரும்ப எடுத்தால் கூட மிகப்பெரிய தொகை பிரபாசிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது,
படத்தின் மீதான எதிர்பார்ப்பு மட்டுமின்றி அனுஷ்காவின் தரிசனமும் கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் என்ற முக்கியமான கேள்விக்கு விடையும் 2 ம் பாகத்தில் இருப்பதால் படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனவே முதல் பாகத்தில் கிடைத்ததை விடவும் பல மடங்கு தொகையினை பிரபாஸ் பெறவிருக்கின்றார், இந்த சம்பளத்தைப் பெறும்போது டோலிவுட்டில் மட்டுமல்லாது இந்திய அளவில் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நடிகராகவும் பிரபாஸ் உயர்ந்து விடுவார் என்று சொல்கின்றனர். இதனைக் கேட்டு பல முன்னணி தெலுங்கு நடிகர்களும் ஆடிப் போயிருக்கின்றனாராம்...என் உழைப்பு என் பணம்னு பிரபாஸ் சொல்லும் காலம் தொலைவில் இல்லை.
Source: tamil.filmibeat.com
![]() |
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.