this site the web

Friday, June 26, 2015

பாகுபலி பாடல் வரிகள் தமிழில் (Baahubali Lyrics in Tamil)


இருள் கொண்ட வானில் :

இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடி கூட்டில் முளைக்கும் பாகுபலி

கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சார்...  அமுதார்...  மொழி

வான் விட்டு மகிழ்மதி ஆண்டிடவே
வந்த சூரியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி

கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சார்... அமுதார்...  மொழி

அம்பென்றும் குறி மாறியதில்லை
வாளென்றும் பசியாறியதில்லை
முடிவென்றும் பின்வாங்கியதில்லை
தானே... சேனை.... ஆவான்

தாயே இவன் தெய்வம் என்பான்
தமையன் தன் தோழன் என்பான்
ஊரே தன் சொந்தம் என்பான்
தானே...  தேசம்...  ஆவான்

சாசனம் எது?  சிவகாமி சொல் அது!
விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே...

கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சார்... அமுதார்...  மொழி

பச்சை தீ நீயடா :

பச்சை  தீ  நீயடா ...  கச்சை  பூ  நானடா
ஒற்றை  பார்வை  கொண்டே  பற்றிக்கொண்டாயடா
வெற்றுக்கல்  நானடா  வெட்டும்  உளி  நீயடா
அற்பப்பாறை  என்னில்  சிற்பம் செய்தாயடா

நீயே  மண்  மின்னும்  வெண்தாரகை
உள்ளங்கை  சேர்ந்த  பூங்காரிகை
கைகள்  நாம்  கோர்க்க  சிறகாகுமே
புது  வானங்கள்  உருவாகுமே

பச்சை  தீ  நீயடா ...  கச்சை  பூ  நானடா
ஒற்றை  பார்வை  கொண்டே  பற்றிக்கொண்டாயடா

மான்  விழிக்குள்  எந்தன்  வாழ்வொன்றைக்காண
மாமலை  ஒன்றேறி  வந்தேனடி
இதயமொன்று  உள்ளதென்று  உன் அணைப்பாலே  கண்டேனே
இனும்  என்னை  இறுக்கி  அணைத்திடத்  துடித்தேனே

நீயே  மண்  மின்னும்  வெண்தாரகை
தோளில்  வீழ்கின்ற  பூங்காரிகை
உந்தன்  தோளோடு  தோள் சேர்க்கிறேன்
என்னில்  தோகைகள்  நான்  பார்க்கிறேன்

பச்சை  தீ  நீயடா ...  கச்சை  பூ  நானடா
ஒற்றை  பார்வை  கொண்டே  பற்றிக்கொண்டாயடா

கீறலில்  உண்டாகும்  கீதங்கள்  கேட்டால்
மோதலின்  மோகங்கள்  கேட்டாயடி
பிறவி  பல  எடுத்தாலும்
நிகழும்  கணம்  நான்  மறவேனே
வலிகளை  வரமென  தந்திட  கேட்டேனே

நீயே  மண்  மின்னும்  வெண்தாரகை
கண்ணில்  தேன்  சிந்தும்  பூங்காரிகை
உந்தன்  நெஞ்சுக்குள்  நான்  நீந்தினேன்
காதல்  ஆழத்தை  நான்  காண்கிறேன்

பச்சை  தீ  நீயடா ...  கச்சை  பூ  நானடா
ஒற்றை  பார்வை  கொண்டே  பற்றிக்கொண்டாயடா
வெற்றுக்கல்  நானடா  வெட்டும்  புலி  நீயடா
அற்பப்பாறை  என்னில்  சிற்பம் செய்தாயடா

தீரனே :

ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?

அந்தரத்தில் ஒரு 
வெண்மதியாய் உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச் 
சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா?

வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!

மயக்கமா? அசதியா? 
என் மடியேறு  நான்  பாடுவேன்
உனை வழி நடத்தியே 
துணையாக  நான்  மாறுவேன்

தடைகளை தகர்த்திந்த
மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன் 
உனைக் காண...
விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான் இங்கே எதிர்க்கின்றேன்
உன் பூமுகம் அதைக் காணவே
இப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே!

வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!

உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்!
சிகரங்கள் துளைத்து வா 
வழி மீது விழி வைக்கிறேன்!

வீரனே! உலகம் உந்தன் கீழே

தீரனே! நீ நினைத்தாலே!

மனோகரி :

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளன் நானோ உன்னை அள்ள 
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ? 
ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாளி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!
அடக்கிட வா! 
மனோகரி.... மனோகரி... 
மனோகரி... மனோகரி....

பூவை விட்டு பூவில் தாவி 
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

ஜீவ நதி :

முன்னாளின் ரணத்தை
எதிர்காலத்தின் கனாவை
மடியிலே ஏந்திக் கொண்டு...
ஜீவ நதி!

வேறேதும் நிலையில்லை என்று
ஊழ் வழியிலே மனது உடைந்து
போகிறதே ஜீவ நதி!

மலை தடுத்தோ
வனம் கிழித்தோ
கால்கள் நில்லா நதி
ஜீவ நதி!



மூச்சிலே தீயுமாய் :

மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே!
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே... உயிர்த்து எழு!

இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!

ஞானத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!

குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!

தன்னிற் றுயிற்ற துளிர்களின்
அரணே என போற்றுவாய்!
எதிர்க்கும் பதர்களை
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!

புரிசை மத்தகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அரியாசனமும்
வாழியே!



சிவா சிவாய போற்றியே :

சிவா சிவாய போற்றியே! 
நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே!
பொறுத்தருள் அநேகனே!

பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்!
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்!

யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!

கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!

எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
கலைமகள் உன் கைதியே

அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் அந்தமே!






MORE INTERESTING UPDATES ON THE BLOG'S FACEBOOK PAGE



Bookmark and Share

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 

Prabhas Orkut Community

Check out our Prabhas Community in Orkut for all the latest and lots of info about Prabhas

Follow me